எரிசக்தி அமைச்சருக்கும் மத்திய வங்கி ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு

#SriLanka #Central Bank #Power
எரிசக்தி அமைச்சருக்கும் மத்திய வங்கி ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (30) காலை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவை சந்தித்தார்.

எதிர்வரும் ஜூன் மாதத்திற்கான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு தேவையான டொலர்களை பெற்றுக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.

ஜூன் மாதத்திற்கான எரிபொருள் இறக்குமதிக்காக 554 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தேவையிலிருந்து 100 மில்லியன் டாலர் இந்தியக் கடன் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

மேலும் இந்திய அரசுடன் மேலும் ஒரு கடனைப் பெற பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தெரியவந்தது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4