காஞ்சன நந்தலால் சந்திப்பு: எரிபொருளுக்காக 554 மில்லியன் டொலர்கள் வழங்கல்

Mayoorikka
4 years ago
காஞ்சன நந்தலால் சந்திப்பு: எரிபொருளுக்காக 554 மில்லியன் டொலர்கள் வழங்கல்

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று காலை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவை சந்தித்துள்ளார்.

இதன்போது, அடுத்த மாதத்துக்கான எரிபொருளை இறக்குமதி செய்ய தேவையான டொலரை பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ஜூன் மாத எரிபொருள் இறக்குமதிக்காக 554 மில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கடன் திட்டத்தின் கீழ் 100 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்படவுள்ளதாக கலந்துரையாடலின் போது தெரியவந்துள்ளது.

மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாகப் பெற இந்திய அரசுடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக இதன்போது தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4