தென்னிலங்கையில் நடைபெறும் போராட்டங்களுக்கு வடக்கில் ஆதரவு

#SriLanka #NorthernProvince
தென்னிலங்கையில் நடைபெறும் போராட்டங்களுக்கு வடக்கில் ஆதரவு

தென்னிலங்கையில் நடைபெறும் போராட்டங்களுக்கு வடக்கில் ஆதரவு வழங்குவதற்கு யாழ்ப்பாணத்தில் உள்ள தொழிற்சங்கங்களும் மாணவ அமைப்புக்களும் தீர்மானித்துள்ளன.

யாழ்.பல்கலைக்கழக மாணவர் சங்கங்களும் யாழ்ப்பாணத்தில் உள்ள சில தொழிற்சங்கங்களும் இதற்கான இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினுடன், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள தொழிற்சங்கங்கள் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் சம்பந்தப்பட்ட தரப்பு இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.

வடக்கிலும் தெற்கிலும் உள்ள மாணவர்களும் மக்களும் தனித்தனியாகப் போராடி தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது கடினம் என்பதால், இனிமேல் தென்னிலங்கை மக்களுடன் ஒன்றிணைந்து தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தென்னிலங்கையின் பிரச்சினைகளுக்கு வடக்கு மக்களின் ஆதரவைப் பெறுவதற்கான உடன்படிக்கையை உருவாக்குவது குறித்து இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4