கோட்டா பதவி விலகினால் பசில் ஜனாதிபதியாக முடியும் – விஜேதாச ராஜபக்ஷ

Prabha Praneetha
4 years ago
கோட்டா பதவி விலகினால் பசில் ஜனாதிபதியாக முடியும் – விஜேதாச ராஜபக்ஷ

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திடீரென பதவி விலகினால் ஏற்படக் கூடிய நிலைமைகள் குறித்து நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள அவர், “ஜனாதிபதியை இராஜினாமா செய்யுமாறு கூறுகிறார்கள். அந்த பிரச்சினை தீர்ந்தால் அடுத்த பிரச்சினை என்னவாக இருக்கும்? அவர் இராஜினாமா செய்தால் அடுத்து, என்ன நடக்கும்?

அடுத்த ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

நாடாளுமன்றத்தில் தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கே பெரும்பான்மை பலம் உள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களை பசில் ராஜபக்ஷவே கட்டுப்படுத்தி வைத்துள்ளார்.

எனவே, தற்போதைய ஜனாதிபதி பதவி விலகினால் பசில் ராஜபக்ஷவே ஜனாதிபதியாக முடியும்” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4