இலங்கையில் எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு!

Nila
4 years ago
இலங்கையில் எரிவாயு விநியோகம் தொடர்பில்  லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு!

3,500 மெட்ரிக் டன் எரிவாயு அடங்கிய கப்பல் ஒன்று இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

எனினும் நாளை வரையில் சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுதினம் முதல் எரிவாயுவை விநியோகிக்க முடியும் என லிட்ரோ நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக இன்றும் நாளையும் எரிவாயுவுக்காக வரிசையில் காத்திருப்பதை தவிர்க்குமாறு பொது மக்களிடம் கோரப்பட்டுள்ளது.

இதேவேளை, எரிவாயு அடுப்புக்கு மாற்றீடாக சில அடுப்புகள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற போதிலும் அவற்றின் விலை அதிகரித்து காணப்படுகிறது.

அத்துடன் சில அடுப்புகளுக்காக பயன்படுத்தப்படும் கரியின் விலையும் தற்போது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4