பதுக்கி வைக்கப்பட்டு இருந்த எரிபொருட்கள் மீட்பு

Mayoorikka
4 years ago
பதுக்கி வைக்கப்பட்டு இருந்த எரிபொருட்கள் மீட்பு

சுன்னாகம் - ஏழாலை, தெற்கு மயிலங்காட்டுப் பகுதியில் வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த எரிபொருட்களுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கமைய பொலிஸ் விசேட பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய , பதுக்கி வைக்கப்பட்டிருந்த எரிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. 

1,670 லீட்டர் மண்ணெண்ணெய், 310 லீட்டர் பெட்ரோல், 200 லீட்டர் டீசல் என்பன கைப்பற்றப்பட்டது. 

மேலும், குப்பிளான் பிரதேசத்தில் 40 லீட்டர் பெற்றோலுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4