இலங்கை அரச ஊழியர்களுக்கு வெளியாகவுள்ள முக்கிய அறிவுறுத்தல்!

Nila
4 years ago
இலங்கை அரச ஊழியர்களுக்கு வெளியாகவுள்ள முக்கிய அறிவுறுத்தல்!

அரச ஊழியர்கள் 5 நாட்களும் பணிக்கு சமூகமளிப்பது அவசிமற்றதென வெகுவிரைவில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

உலக உணவு பற்றாக்குறை தொடர்பில் பல்வேறு தரப்பினர் எதிர்வு கூறியுள்ளார்கள், இச்சவாலை வெற்றிக்கொள்ள அரசாங்கம் சிறந்த திட்டங்களை வகுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவற்றை விரைவாக செயற்படுத்த தீர்மானித்துள்ளது. பல்வேறு காரணிகளினால் தேசிய விவசாயத்துறை பாதிக்கப்பட்டுள்ளது.

அரச காரியாலயங்களை சூழவுள்ள காணிகளில் மேலதிக பயிர்ச்செய்கையில் ஈடுப்படுமாறு சகல அரச ஊழியர்களிடமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் பயன்படுத்தப்படாத நிலையில் உள்ள விசாலமான அரச மற்றும் தனியார் காணிகளில் தற்காலிகமாக மேலதிக பயிர்ச்செய்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரச சேவையாளர்கள் 5 நாட்களும் சேவைக்கு சமூகமளிப்பது அவசியமற்றது என விரைவில் அறிவிக்கப்படும். ஆகவே அரச ஊழியர்கள் மேலதிகமாக உள்ள நேரத்தை பயனுடையதாக்கும் வகையில் வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கையில் ஈடப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன் சகல தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் மாத்திரமே உணவு தட்டுப்பாட்டு சவாலை வெற்றிக்கொள்ள முடியும். பொது மக்கள் இயலுமான அளவு தமக்கு தேவையான உணவு பொருட்களை உற்பத்தி செய்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4