அட்டலுகம சிறுமி கொலை: 30 பேரிடம் வாக்குமூலம் பதிவு

Prathees
4 years ago
அட்டலுகம சிறுமி கொலை:  30 பேரிடம் வாக்குமூலம் பதிவு

பண்டாரகம, அட்டலுகமவில் பாத்திமா ஆயிஷா அக்ரம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுப் பிரிவைத் தவிர மேலும் ஐந்து பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் ஏற்கனவே குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அயலவர்கள் உட்பட 30 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாத்திமா ஆயிஷா அக்ரம் கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணை இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதன்படி, ஏற்கனவே குற்றப் புலனாய்வுப் பிரிவின் கீழ் இயங்கும் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று, அட்டலுகம சிறுமி வாழ்ந்த பகுதிக்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

குறித்த சிறுமி நேற்றுமுன்தினம் தனது வீட்டுக்கு அருகில் உள்ள கடைக்கு கோழிக்கறி வாங்கச் சென்றுவிட்டு வீடு திரும்பிய போது காணாமல் போயுள்ளார்.

நேற்று மதியம் வீட்டை ஒட்டிய சதுப்பு நிலத்தில் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4