அட்டலுகம சிறுமியின் மரணம்  தொடர்பான விசாரணை சீஐடியிடம்

Prathees
4 years ago
அட்டலுகம சிறுமியின் மரணம்  தொடர்பான விசாரணை சீஐடியிடம்

பண்டாரகம அட்டலுகம பிரதேசத்தில் 9 வயதுடைய பாத்திமா ஆயிஷாவின் மரணம் தொடர்பாக விசாரணை குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பண்டாரகம அட்டலுகம பிரதேசத்தில் 9 வயதுடைய பாத்திமா ஆயிஷாவின் மரணத்திற்கு நீதி வழங்குவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

இதேவேளை, பாரிய குற்றம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சிறுமியின் மரணம் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ டுவிட்டர் செய்தியில் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனதாக கூறப்படும் சிறுமியின் சடலம் நேற்று (28) அவரது வீட்டிற்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்தில் கண்டெடுக்கப்பட்டதுடன், அவரது மரணம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4