பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க!

Reha
4 years ago
பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி நிலைமையை சமாளித்து அரசியல், பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதற்கான வழிமுறைகள் பற்றியும் ஆராய்ந்து வருகிறார்.

இதன்படி, உலக நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் முதலீடுகளை பெறும் நோக்கில் பொருளாதார மாநாடு ஒன்றை நடத்துவதற்கு பிரதமர் திட்டமிட்டுள்ளார்.

இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தை முன் வைப்பதற்கு முன்னர் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரியவருகின்றது.

இலங்கையில் பொருளாதார மறுசீரமைப்பு இடம்பெற்றால் உதவிகளை வழங்குவதற்கு முதலீடுகளை செய்வதற்கு தயார் என வெளிநாட்டு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

எனவே, இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் பொருளாதார மறுசீரமைப்பு திட்டங்களும் முன் வைக்கப்படவுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4