புகையிரதங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்!
Mayoorikka
3 years ago

தற்போது சேவையில் ஈடுபடும் புகையிரதங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், புகையிரதங்களில் இணைக்கப்பட்டுள்ள பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
பஸ் கட்டண உயர்வை அடுத்து புகையிரதங்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக புகையிரத பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.



