IPL Match69 - 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி - பிளே ஆப் வாய்ப்பை இழந்த டெல்லி

#IPL #T20
Prasu
4 years ago
IPL Match69 - 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி - பிளே ஆப் வாய்ப்பை இழந்த டெல்லி

மும்பையில் இன்று நடைபெற்ற 69-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. ராவன் பவல் 43 ரன், கேப்டன் ரிஷப் பண்ட் 39 ரன், பிருத்வி ஷா 24 ரன்கள் எடுத்தனர்.

மும்பை அணி சார்பில் பும்ரா 3 விக்கெட், ரமன்தீப் சிங் 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை அணி களமிறங்கியது. கேப்டன் ரோகித் சர்மா 2 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். பிரெவிஸ், இஷான் கிஷணுடன் ஜோடி சேர்ந்தார். பிரெவிஸ் 39 ரன்னில் ஆட்டமிழந்தார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 48 ரன்னில் இஷான் கிஷண் வெளியேறினார்.

4வது விக்கெட்டுக்கு இணைந்த திலக் வர்மா, டிம் டேவிட் ஜோடி 52 ரன்கள் சேர்த்தது. டிம் டேவிட் 11 பந்தில் 4 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 34 ரன்கள் எடுத்தார். திலக் வர்மா 21 ரன்னில் அவுட்டானார்.

இறுதியில், மும்பை அணி 160 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இது மும்பை அணி பெறும் 4வது வெற்றி ஆகும்.

மும்பைஅணி வெற்றி பெற்றதால், டெல்லி அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறியது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4