மேலதிக வகுப்புக்கள், செயலமர்வுகளுக்கு இன்று முதல் தடை

Mayoorikka
4 years ago
மேலதிக வகுப்புக்கள், செயலமர்வுகளுக்கு இன்று முதல் தடை

2021ம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைகளுக்கான மேலதிக வகுப்புக்கள், செயலமர்வுகள் உள்ளிட்ட அனைத்து கற்பித்தல் நடவடிக்கைகளும் இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளன.

இந்த உத்தரவை மீறி மேலதிக வகுப்புக்கள், செயலமர்வுகளை நடத்துவோர் தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைக்கும் பட்சத்தில், அது குறித்து பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது பரீட்சைகள் திணைக்களத்திற்கோ அறிவிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன கேட்டுக்கொண்டுள்ளார்.

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் எதிர்வரும் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4