கோட்டையில் HND மாணவர் போராட்டத்தின் மீது கண்ணீப்புகைத் தாக்குதல்!

Prathees
4 years ago
கோட்டையில் HND மாணவர் போராட்டத்தின் மீது கண்ணீப்புகைத் தாக்குதல்!

இன்று கொழும்பு, கோட்டையில் HND மாணவர்கள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்ட பேரணியின் மீது பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர்.

உயர் தேசிய டிப்ளோமா மாணவர்கள் குழுவினால் நடத்தப்படும் ஆர்ப்பாட்ட பேரணிக்கு சில கட்டுப்பாடுகளை விதித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று காலை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொழும்பு கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரச அலுவலகங்கள் மற்றும் திணைக்களங்கள் மற்றும் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இல்லங்களுக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலுக்கட்டாயமாக நுழையவோ அல்லது தாக்கவோ முடியாது என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்கள் வன்முறை அல்லது நாசகார செயல்களில் இருந்து விலகி, பணியில் இருக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கு இடையூறு விளைவிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மாணவர் அமைப்பின் அழைப்பாளர், அதன் உறுப்பினர்கள் மற்றும் சம்பவ இடத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4