சட்டவிரோதமாக போதைப்பொருள் வைத்திருந்த இருவர் கைது

Prathees
4 years ago
சட்டவிரோதமாக போதைப்பொருள் வைத்திருந்த இருவர் கைது

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று (20) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் வெல்லம்பிட்டிய - மீதொட்டமுல்ல பிரதேசத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மீது சட்டவிரோத போதைப்பொருள் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

அவளிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட ஐஸ் போதைப்பொருளின் அளவு 20 கிராம் 605 மில்லிகிராம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 37 வயதான சந்தேக நபர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இதேவேளை, சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 59 வயதுடைய நபரொருவர் பூகொட பொலிஸாருடன் தம்பகல்ல விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பூகொட - உடகனம்பல்ல பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

அங்கு 67.5 லிட்டர் சாராயமும் 749 லிட்டர் கோடாவும் கண்டுபிடிக்கப்பட்டது.

'வக' பகுதியைச் சேர்ந்த இவர் எதிர்வரும் 25ஆம் திகதி பூகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4