தமிழர் பகுதியிலிருந்து காலி முகத்திடலுக்கு சைக்கிள் பயணம்!

#SriLanka #Mullaitivu
தமிழர் பகுதியிலிருந்து காலி முகத்திடலுக்கு சைக்கிள் பயணம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடுவிலிருந்து காலிமுகத்திடல் நோக்கி நீதிகோரிய பயணம் ஒன்றினை குடும்பஸ்தர் ஒருவர் துவிச்சக்கர வண்டியில் மேற்கொண்டுள்ளார்.

கிளிநொச்சி மயில்வாகனபுரம் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான இராசரத்தினம் ஜனகவர்மன் என்ற 32 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு பயணத்தை ஆரம்பித்தார்.

நேற்று காலை விசுவமடு சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட இப்பயணத்திற்கு மக்கள் தமது ஆதரவினை வழங்கினர்.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரியும், பொருளாதார நெருக்கடி தொடர்பில் கோட்டா கோ கம போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதேவேளை நான்கு நாட்கள் துவிச்சக்கர வண்டியில் பயணித்து அவர் காலி முகதிடலை சென்றடையவுள்ளார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4