இந்த மாத இறுதிக்குள் இலங்கை இயல்பு நிலைக்கு திரும்பும்!

Nila
4 years ago
இந்த மாத இறுதிக்குள் இலங்கை  இயல்பு நிலைக்கு திரும்பும்!

இந்த மாத இறுதிக்குள் நாடு இயல்பு நிலைக்கு திரும்பும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

“இந்த வாரம் எரிபொருளை பெற்றுக்கொள்ள இரண்டு கப்பல்களுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளன. இதற்கு தேவையான நிதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை இருவாரங்களுக்குள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியும்.

இரண்டு வாரங்களுக்குப் பிறகு நாங்கள் சியாம் காஸ் நிறுவனத்துடன் ஒரு உடன்படிக்கையை மேற்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் இயல்பு நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கிறோம். லாஃப்ஸ் கேஸின் 30 வீத விற்கப்படாத பங்கு எங்களைப் பெரிதும் பாதிக்கிறது. எனவே, இம்மாத இறுதிக்குள் நிலமை வழமைக்கு திரும்பும். என்றார்.

இதேவேளை, ஐக்கிய தேசிய சுயதொழில் சம்மேளனத்தின் தலைவர் பிரதீப் சார்ள்ஸ் கருத்து தெரிவிக்கையில்,

நாங்கள் இன்று ஆறாவது தடவையாக லிட்ரோ நிறுவனத்திக்கு வந்துள்ளோம். நாங்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு தொடர்ச்சியாக லிட்ரோ நிறுவனம் தொடர்பில் முறைப்பாடு அளித்தது வந்துள்ளோம். குறித்த நிறுவனத்தில் ஒரு எரிவாயுவிற்கு 406 ரூபாய் மோசடி மற்றும் 12.5 லிட்டர் எரிவாயு சிலிண்டரின் கொள்ளளவை குறைக்கப்பட்ட போதும் முறைப்பாடுகளை பதிவிட்டோம், நாங்கள் நிறுவனத்திற்கு எதிராக இதுவரையில் மூன்று தடவைகள் முறைப்பாடுகளை அளிக்கப்பட்ட போது இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றார்.

இதற்கு பதிலளித்த லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி,

“சந்தையில் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு விலவுவதால் கறுப்பு சந்தை தோற்றம் பெறுகின்றது. நிறுவனம் என்றவகையில் விநியோக முறையை சரியாக பேணவேண்டியுள்ளது. சந்தைக்கு எரிவாயுவை சரியாக விநியோகிக்கின்ற போது கறுப்புச் சந்தை இல்லாமல் போகும். எங்களுக்கு சிறிது காலம் தேவைப்படுகின்றது அடுத்த இரண்டு வாரங்களில் எமது விநியோகத்தை சரிசெய்ய முடியும்.” என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4