நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இடைநிறுத்தம்!!

Prabha Praneetha
4 years ago
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இடைநிறுத்தம்!!

நாரஹேன்பிட்ட பொலிஸ் போக்குவரத்து பிரிவினூடாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று காலை முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு குறைந்த விலையில் எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக வெளியான தகவலையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால் எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கும் குறைந்த விலைக்கு எரிபொருள் விநியோகிக்கப்படவில்லை என சுமித் விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.

நாரஹேன்பிட்ட பொலிஸ் போக்குவரத்து பிரிவில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்களுக்கு எரிபொருளை விநியோகிப்பது தொடர்பில் சபாநாயகரினால் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வீடு திரும்புவதற்கு எரிபொருள் இல்லாவிட்டால் தங்குவதற்கு விடுதியொன்றை முன்பதிவு செய்யுமாறு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4