நாட்டின் தற்போதைய நிலைமைகளுக்கு தேரர்களே பொறுப்பு கூற வேண்டும் - மனோ கணேஷன்

Reha
4 years ago
நாட்டின் தற்போதைய நிலைமைகளுக்கு தேரர்களே பொறுப்பு கூற வேண்டும் - மனோ கணேஷன்

நாட்டின் தற்போதைய நிலைமைகளுக்கு தேரர்களே பொறுப்பு கூற வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஒன்பதாம் திகதி இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் மாறி, மாறி குற்றச்சாட்டுக்களை சுமத்துவதில் எந்த பயனும் இல்லை. இந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் பிரதான காரணம் தேரர்கள்.

தேரர்கள் அரசியலில் ஈடுபடக் கூடாது. இந்து குருக்கள் ஆலயங்களில் இருப்பதை போன்று இஸ்லாமிய இமாம்கள் பள்ளிவாசல்களில் இருப்பதை போன்று, கத்தோலிக்க பாதிரியார் தேவாலயங்களில் இருப்பதை போன்று தேரர்கள் விகாரைகளில் இருக்க வேண்டும்.

1959 ஆம் ஆண்டு முதல் அரசியல் கொலையை, ஒரு பௌத்த பிக்குவே மேற்கொண்டார்.

அதன்பின் பௌத்த மதத்தை அரசியலில் கலக்க விட்டு, இந்த நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் சென்றுள்ளார்கள்.

இத்தனை பிரச்சினைக்கும் தேரர்களே காரணம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4