உலக வங்கி இணங்கினால் பெற்றோல் விநியோகத்தில் உள்ள பிரச்சினை தற்காலிகமாக தீர்க்கப்படும்- ரணில்

Nila
4 years ago
உலக வங்கி  இணங்கினால் பெற்றோல் விநியோகத்தில் உள்ள பிரச்சினை தற்காலிகமாக தீர்க்கப்படும்- ரணில்

உலக வங்கி அவசர தேவைகளுக்காக நேற்றைய தினம்  160 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது.எனினும் அதனை பெற்றோல் இறக்குமதிக்கு பயன்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தாம் இதனை எதிர்பார்க்கின்றபோதும் இன்று உலக வங்கி அதிகாரிகளுடன் கொழும்பில் இடம்பெறவுள்ள சந்திப்பின்போது அவர்களிடம் இது தொடர்பில் கோரிக்கையை முன்வைக்கவுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

அவர்கள் இணங்கினால் பெற்றோல் விநியோகத்தில் உள்ள பிரச்சினையை தற்காலிகமாக தீர்க்கமுடியும்.இல்லையேல், பெற்றோலுக்காக நிதியை தேடும் பணியில் ஈடுபடவேண்டியிருக்கும் என்று ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

இதேவேளை அரசாங்கத்தில் அங்கம் வகிக்காதபோதும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கோரியபோன்று, ஐக்கிய மக்கள் சக்தியின் ஹர்ச டி சில்வா, எரான் விக்கிரமரட்ன மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோரை இணைத்து செயற்படுவதில் தமது பிரச்சினையில்லை என்றும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 

அத்துடன் கட்சிகளின் பிரதிநிதிகளின் கீழ் மாவட்ட மட்டத்தில் குழுக்களை அமைத்து பொருளாதார பிரச்சினைகளை தீர்க்கும் முயற்சியை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பி்டார்

நாட்டின் வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டை கருத்திற்கொண்டு நீரிழிவு நோய் தொடர்பான மருந்தை பெற்றுத்தரவேண்டும் என்று அவர், எதிரகட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுத்தார்.இதற்கு பதிலளித்த சஜித் , தாம் உயிர் காக்கும் கருவிகளையே வைத்தியசாலைகளுக்கு விநியோகித்து வருவதாக குறிப்பிட்டார்

எனினும் ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கையின்படி, குறித்த ஒரு மருந்தை பெற்றுக்கொடுக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்இதேவேளை வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் அனைவரும் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளவேண்டும் என்று சஜித்  நாடாளுமன்றில் வைத்து கோரிக்கை விடுத்தார்.அத்துடன் வெளிநாட்டவர்கள், இலங்கைக்கு சுற்றுலாவை மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர் சர்வதேச சமூகத்துக்கு வேண்டுகோள் விடுத்தார்.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4