மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு
#SriLanka
#Mannar
Shana
2 years ago

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் மன்னார் - பஜார் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இன்றைய தினம் (18) காலை 08 மணியளவில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதன்போது முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த மக்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மற்றும் அந்நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு காலை உணவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதனைத்தொடர்ந்து மன்னார் சமூக பொருளாதார அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் மன்னார் - முழங்காவில் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.



