முள்ளிவாய்க்கால் நோக்கிய பேரணி புதுக்குடியிருப்பிலிருந்து ஆரம்பம்

#SriLanka #Lanka4
Shana
4 years ago
முள்ளிவாய்க்கால் நோக்கிய பேரணி புதுக்குடியிருப்பிலிருந்து ஆரம்பம்

முள்ளிவாய்க்கால் நோக்கிய பேரணியொன்று புதுக்குடியிருப்பிலிருந்து சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.

“இனவிடுதலை தேடி முள்ளிவாய்க்கால் நோக்கி” என்ற தொனிப்பொருளில் பொத்துவிலிலும் பொலிகண்டியிலும் ஆரம்பித்த நடைபவனிகள் நேற்று மாங்குளத்தில் ஒன்றிணைந்தன.

அங்கிருந்து பரந்தன் ஊடாக வள்ளிபுனத்தை வந்தடைந்து, கடந்த 2006ஆம் ஆண்டு வள்ளிபுனம் பகுதியில் விமானக் குண்டுவீச்சில் பலியாகிய மாணவர்களுக்கான அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து புதுக்குடியிருப்பு நகர் பகுதியை அடைந்து பேரணி நிறைவடைந்திருந்தது.

இவ்வாறு நிறைவடைந்த குறித்த நடைபவனி சற்றுமுன்னர் புதுக்குடியிருப்பிலிருந்து ஆரம்பமாகி முள்ளிவாய்க்காலில் இடம்பெறவுள்ள நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ள செல்லவுள்ளது. 

இந்த பேரணியானது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றம் வரை சென்று அங்கு இடம்பெறும் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளது.

அத்துடன் அனைத்து உறவுகளையும் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4