இலங்கையின் நிலை தொடர்பில் பிரித்தானியா வெளியிட்ட செய்தி

Nila
4 years ago
இலங்கையின் நிலை தொடர்பில் பிரித்தானியா  வெளியிட்ட செய்தி

இலங்கையில் உணவுப்பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் உட்பட அனைத்து நிலைமைகளையும் உன்னிப்பாக அவதானித்துவருவதாக பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய அமைச்சர் தாரிக் அஹமட் பிரபு தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கையின் கடன்நிலை தொடர்ந்தும் தாங்கிக்கொள்ள முடியாத விடயம் என சர்வதேச நாணயநிதியம் மதிப்பிட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கடனை பேண்தகுநிலைக்கு மாற்றுவதற்கு அவசியமான சீர்திருத்தங்கள் நிதி உதவிகள் குறித்து சர்வதேசநாணயநிதியத்துடன் மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தைகளை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போதைய நெருக்கடி திடீரென உருவாகவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4