முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 13 ஆம் ஆண்டு நினைவஞ்சலி இன்று அனுஷ்டிப்பு!

#Mullaitivu
Mayoorikka
4 years ago
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 13 ஆம் ஆண்டு நினைவஞ்சலி இன்று அனுஷ்டிப்பு!

இறுதிக்கட்ட யுத்ததின் போது உயிரிழந்த மக்களை நினைவு கூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 13 ஆம் ஆண்டு இன்றாகும்.
 
இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று காலை 10.30 க்கு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இடம்பெறவுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொது  கட்டமைப்பின் இணைத்தலைவர்களில் ஒருவரான லியோ அடிகளார் நினைவேந்தல் நிகழ்வில் அனைத்து உறவுகளையும் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில் இனவிடுதலை தேடி முள்ளிவாய்க்கால் நோக்கி என்ற தொனிப்பொருளில் பொத்துவிலிலும் பொலிகண்டியிலும் ஆரம்பித்த  நடை பவணிகள் இன்று மாங்குளத்தில் ஒன்றிணைந்து பரந்தன் ஊடாக வள்ளிபுனத்தை வந்தடைந்தது.

 கடந்த 2006 ஆம் ஆண்டு வள்ளிபுனம் பகுதியில் விமானக் குண்டுவீச்சில் பலியாகிய  மாணவர்களுக்கான  அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து புதுக்குடியிருப்பு நகர் பகுதியை வந்து பேரணி நிறைவடைந்துள்ளது

இவ்வாறு நிறைவடைந்த குறித்த நடைபவனி ஆனது    புதுக்குடியிருப்பில் இருந்து ஆரம்பமாகி  இன்று  பத்து முப்பதுக்கு முள்ளிவாய்க்காலில் இடம்பெறவுள்ள நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளதாக குறித்த பேரணியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்

  13 ஆண்டுகள் கடந்தும்  நீதி கிடைக்காத இந்த   இன அழிப்பை பல தடைகளை தாண்டியும் தமிழர்கள் வருடா வருடமாக நினைவுகூர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4