ஃபின்லாந்து, ஸ்வீடன் நேட்டோவில் இணைவதை துருக்கி ஆதரிக்காது- ஜனாதிபதி அறிவிப்பு

ரஷியா, உக்ரைன் இடையே ஏற்பட்டுள்ள போர் துருக்கியின் கப்பல் போக்குவரத்துத் துறையை கடுமையாக பாதித்துள்ளது. ரஷியா மீது சர்வதேச நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடை துருக்கியின் வர்த்தக சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சரக்கு போக்குவரத்துக்கான தடை, போக்குவரத்து செலவு அதிகரிப்பு, எரிசக்தி மற்றும் மூலப்பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட சவால்களை துருக்கி அரசு சந்தித்து வருகிறது. இதுதொடர்ந்தால் சிறிய கப்பல் நிறுவனங்களை மூடவேண்டிய அபாயம் ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்தனர்.
ரஷிய படைகள் அந்நாட்டின் மரியுபோல் நகரை கடந்த சில வாரங்களாக கடும் தாக்குதல் நடத்தி கைப்பற்றின. அங்கிருந்த உருக்கு ஆலையில் இருந்து 260 உக்ரைன் வீரர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என உக்ரைன் தெரிவித்தது.
இந்நிலையில், உக்ரைன் அரசின் இந்தக் கூற்றை ரஷியா மறுத்துள்ளது. இதுதொடர்பாக, ரஷிய வெளியுறவுத்துறை அதிகாரிகள் கூறுகையில், உக்ரைனின் அசோவ்ஸ்டல் உருக்கு ஆலையில் இருந்த 265 வீரர்கள் சரணடைந்தனர். அவர்களில் பலர் காயம் அடைந்திருந்தனர் என தெரிவித்துள்ளது.



