ஒரு கையில் குழந்தை, மறுகையில் சூட்கேஸ் - விமான பயணிகளை மிரளவைத்த தாய்

Prasu
2 years ago
ஒரு கையில் குழந்தை, மறுகையில் சூட்கேஸ் - விமான பயணிகளை மிரளவைத்த தாய்

வெளிநாட்டு விமானத்தில் கைக்குழந்தையுடன் பயணித்த ஒரு பெண் தனது காலால் விமானத்தில் உள்ள கேபின் கதவை அசால்ட்டாக மூடிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விமானம் ஒன்றில் பயணம் முடிந்து அனைத்துப் பயணிகளும் இறங்க தயாராகிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அந்த விமானத்தில் பயணம் செய்த ஓர் இளம்பெண் ஒரு கையில் தனது கைக்குழந்தையை வைத்துள்ளார். மறு கையில் இருக்கைக்கு மேலிருக்கும் கேபினில் இருந்து மற்றொருவர் உதவியை நாடாமல் தனது பெட்டியை எடுத்துள்ளார்.

அதன்பின், அந்த பெண் கேபின் கதவை மூட தனது காலை நேர் மேலே தூக்கி கேபினை அசால்ட்டாக மூடுகிறார். பார்ப்பதற்கு அவர் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையாக இருக்கிறார். இந்தக் காட்சியைக் கண்ட சக பயணிகள் மிரட்சி அடைந்தனர். இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.

யார் உதவியையும் எதிர்பாராமல் தானாகவே கேபின் கதவை அசால்ட்டாக மூடிய அந்தப் பெண்ணின் திறமைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!