ரணிலுக்கு ஆதரவளிக்கும் பிள்ளையான்
-1-1-1-1-1-1.jpg)
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தீர்மானித்துள்ளார்.
கட்சியின் பொதுச் செயலாளர் பிரசாந்தன், தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டைக் காப்பாற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் எடுக்கும் எந்தவொரு சரியான தீர்மானத்திற்கும் தமது கட்சி ஆதரவளிக்கும் என தெரிவித்தார்.
இந்த நிலையில் கட்சியின் நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவித்த பிரசாந்தன்,
அரசியல் வேறுபாடுகள் மற்றும் கொள்கை மாற்றங்கள் குறித்து சிந்திக்க இது நேரமல்ல என்றும், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க புதிய பிரதமர் எடுக்கும் சரியான முடிவுகளுக்கு ஆதரவளிக்க கட்சி முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை மையப்படுத்தியே கட்சி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.



