ஒரு பெண் வந்திருந்தால் மகிழ்ச்சி: ரணில் விக்ரமசிங்க
Mayoorikka
2 years ago

இலங்கை பாராளுமன்றில் பிரதி சபாநாயகராக ஒரு பெண் தேர்வு செய்யப்பட்டிருந்தால் தாம் மேலும் மகிழ்ச்சியடைந்திருப்பேன் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (17) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பிரதமராக பதவியேற்ற பின் நடைபெறும் முதலாவது பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதை தெரிவித்தார். மேலும் குறிப்பிடுகையில்,
பாராளுமன்றத்தின் ஒரு பக்கத்திலிருந்து மறுபுறம் கூக்குரலிடும் கலாச்சாரத்திற்கு மேலும் செல்ல முடியாது எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற செனட் சபையின் பிரதி சபாநாயகராக பதவியேற்ற கடைசிப் பெண் தனது தாயாரின் மாமியார் அட்லைன் மொலமுரே என்றும், அதன்பிறகு எந்த பெண்ணும் இந்த பதவிக்கு வரவில்லை என்றும் ரணில் கூறினார்.



