எரிபொருள் விநியோகத்தை துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை! இன்னும் சில தினங்களில் தட்டுப்பாடு நீங்கும்

Mayoorikka
4 years ago
எரிபொருள் விநியோகத்தை துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை! இன்னும் சில தினங்களில் தட்டுப்பாடு நீங்கும்

எரிபொருள் தட்டுப்பாடு இன்னும் சில தினங்களில் முடிவுக்கு கொண்டுவரப்படும் என நம்புவதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர், தற்போது கொலன்னாவ மற்றும் முத்துராஜவெல ஆகிய பகுதிகளில் இருந்து எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி இன்று (17) முதல் எரிபொருள் விநியோகத்தை துரிதப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4