8 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சீரற்ற வானிலை காரணமாக பாதிப்பு
Prabha Praneetha
2 years ago
-1-1-1-1-1-1.jpg)
கடந்த சில நாட்களாக பெய்த கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 8,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
மேலும் இயற்கை அனர்த்தங்களினால் இருவர் காயமடைந்துள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது.
அந்த நிலையத்தின் அறிக்கையின்படி, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணத்தில் 2099 குடும்பங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்து 331 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி மாவட்டத்தில் 1,991 குடும்பங்களைச் சேர்ந்த 7,934 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 108 குடும்பங்களைச் சேர்ந்த 397 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 232 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.



