பிரான்ஸின் புதிய பிரதமாக எலிசபெத் போர்ன் நியமனம்!

Nila
3 years ago
பிரான்ஸின் புதிய பிரதமாக எலிசபெத் போர்ன் நியமனம்!

பிரான்ஸின் புதிய பிரதமாக முன்னாள் தொழிற்துறை அமைச்சர் எலிசபெத் போர்ன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்மூலம், 61 வயதான போர்ன், பிரான்ஸ் வரலாற்றில் அந்நாட்டு பிரதமராக நியமிக்கப்பட்ட இரண்டாவது பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.கடந்த 30 ஆண்டுகளில் பிரான்சில் முதன்முறையாக பெண் ஒருவர் பிரதமர் பதவியை ஏற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற இம்மானுவேல் மக்ரோன், தனது அரசாங்கத்தில் மாற்றங்களை கொண்டு வர முடிவு செய்ததன் பின்னணியில், முன்னதாக பிரதமராக இருந்த ஜீன் காஸ்டெக்ஸ் நேற்று (திங்கட்கிழமை) தனது பதவியை இராஜினாமா செய்தார்.

இதையடுத்து எலிசபெத் போர்னை புதிய பிரதமராக ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், அறிவித்தார்.

இந்த நியமனத்தை அனைத்து சிறுமிகளுக்கும் அர்ப்பணிக்க விரும்புவதாகவும், அவர்களை கனவுகளுக்குப் பின் செல்ல வேண்டுமெனவும் பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர் உரையாற்றிய போது எலிசபெத் போர்ன், கேட்டுக்கொண்டார்.

புதிய பிரதமர், பருவநிலை மாற்றம் தொடர்பான கொள்கைகளை செயற்படுத்துவதை விரைவுபடுத்துவார் என்று ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், தெரிவித்தார்.

ஜனாதிபதியும், புதிய பிரதமரும் பிரான்ஸ் புதிய அரசாங்கத்தில்ல் பங்கேற்கும் அமைச்சரவை குறித்து இறுதி முடிவு எடுப்பார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

முந்தைய அரசாங்கத்தால் 2020ஆம் ஆண்டிலிருந்து தொழிலாளர் துறை அமைச்சராக இருந்த எலிசபெத் அமுல்படுத்திய சில சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு தொழிலாளர்கள் மற்றும் இடதுசாரிகளிடமிருந்து விமர்சனங்கள் எழுந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!