பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதில் பாராளுமன்றத்தில் குழப்ப நிலை!

Mayoorikka
4 years ago
பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதில் பாராளுமன்றத்தில் குழப்ப நிலை!

பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதில் பாராளுமன்றில் குழப்ப நிலையொன்று ஏற்பட்டுள்ளது.

ஆளும் மற்றும் எதிரணியால் இருவரது பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

இந்த நிலையில் வாக்கெடுப்பை நடத்தி நேரத்தை வீணடிக்காமல் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பேசி தீர்மானிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பிரதி சபாநாயகருக்கு ரோகினி கவிரத்னவின் பெயரை எதிர்க்கட்சிகள் முன்மொழிய, ஸ்ரீ லங்கா பொதுஜ பெரமுன அஜித் ராஜபக்ஷவை முன்மொழிந்துள்ளது.

எனினும், வாக்களித்து இன்றைய நாளை செலவழிக்காமல் ஒருமித்த கருத்துடன் பிரதி சபாநாயகர் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், ஆளும், எதிர்க்கட்சி கட்சிகளைச் சேர்ந்த பலரும், ஒருமித்த கருத்துக்கு இணக்கம் தெரிவித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4