இலங்கையில் அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் எரிபொருள் விநியோகம்!

Nila
4 years ago
இலங்கையில் அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் எரிபொருள் விநியோகம்!

இலங்கையில் அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் எரிபொருளை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து இன்று முதல் எரிபொருளை விநியோகிக்கப்படுகின்றது.

அதற்கமைய, ஒவ்வொரு மாவட்டத்திலும் சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவை ஆணையாளர் நாயகம் ருவன் சந்திர தெரிவித்தார்.

குறித்த தெரிவு செய்யப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களூடாக சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்காக எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.

இதனிடையே, எரிபொருளுக்காக வரிசைகளில் நிற்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4