நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.. துப்பாக்கி ஏந்திய 06 மெய்ப்பாதுகாவலர்கள்..
Prathees
2 years ago

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 6 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
விசேட சுற்றறிக்கையின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், ஆறு பேர் கொண்ட குழுவில் உப பொலிஸ் பரிசோதகரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பாதுகாப்பு குழுக்களுக்கு T56 ரக இரண்டு துப்பாக்கிகள் வழங்கவும் அனுமதிக்கப்படுகிறது.
முன்னதாக, எம்.பி.க்களின் பாதுகாப்புக்காக 2 முதல் 4 அதிகாரிகள் வரை நியமிக்கப்பட்டனர்.



