பிரதமர் பதவிக்கு ரணில் தான் பொருத்தமானவர்.. அவரால் மட்டுமே நாட்டை கட்டியெழுப்ப முடியும்: நாலக தேரர்
Prathees
2 years ago

தற்போது பிரதமர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் ரணில் விக்கிரமசிங்க என வண.பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்துள்ளார்.
காரணம் ரணில் விக்கிரமசிங்க நல்லவர் என்பதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சர்வதேச ஆதரவுடன் கட்டியெழுப்பக்கூடிய ஒரே நபர் ரணில் விக்கிரமசிங்கவே பாராளுமன்றத்தில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
விழாவொன்றின் இறுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.



