மேலும் இரண்டு புதிய அமைச்சர்கள்! ரணிலுக்கு நிதி அமைச்சு?

Mayoorikka
2 years ago
மேலும் இரண்டு புதிய அமைச்சர்கள்! ரணிலுக்கு நிதி அமைச்சு?

அமைச்சரவைக்கு மேலும் இரண்டு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. 

அதற்கிணங்க புதிய கல்வியமைச்சராக முன்னாள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவும் விவசாயத்துறை அபிவிருத்தி அமைச்சராக அனுர பிரியதர்சன யாப்பாவும் புதிய அமைச்சர்களாக ஓரிரு தினங்களில் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பொது ஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த இவர்கள் இருவரும் அண்மையில் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ள குழுவில் உள்ளடங்குகின்றனர்.

அதேவேளை நிதியமைச்சை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!