எரிபொருள் விநியோகம் இன்று முதல் வழமைக்கு - இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

Reha
4 years ago
எரிபொருள் விநியோகம் இன்று முதல் வழமைக்கு - இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

இன்று முதல் மீண்டும் எரிபொருள் விநியோகத்தை வழமைக்கு கொண்டுவருவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு காலை வேளையில் எரிபொருள் கிடைக்கப்பெறும் என்பதுடன், ஏனைய மாகாணங்களுக்கு மதிய வேளையில் எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் சாந்த சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்திய கடன் எல்லை வசதி திட்டத்தின் கீழ் மேலும் ஒரு தொகுதி டீசல் தாங்கிய கப்பல் ஒன்று நேற்று நாட்டை வந்தடைந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4