எரிவாயு தாங்கிய 2 கப்பல்கள் இந்த வாரத்திற்குள் நாட்டை வந்தடையவுள்ளது!

Reha
4 years ago
எரிவாயு தாங்கிய 2 கப்பல்கள் இந்த வாரத்திற்குள் நாட்டை வந்தடையவுள்ளது!

எரிவாயு தாங்கிய 2 கப்பல்கள் இந்த வாரத்திற்குள் நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு கப்பல், 3700 மெட்ரிக் டன் அளவிலான சமையல் எரிவாயுடன் இன்றைய தினம் நாட்டை வந்தடையவுள்ளது.

அதேநேரம், மற்றுமொரு கப்பல் எதிர்வரும் 19ஆம் திகதி நாட்டிற்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சமையல் எரிவாயு கையிருப்பில் இல்லாமையினால் எரிவாயுக்காக மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் கடந்த வாரம் அறிவித்திருந்தது.

எனினும், சமையல் எரிவாயுக்கான பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் உடனடியாக அதனை தரையிறக்கி மக்களுக்கு விநியோகிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4