ஐக்கிய மக்கள் சக்தி எடுத்துள்ள முக்கிய தீர்மானம்!

Prabha Praneetha
4 years ago
ஐக்கிய மக்கள் சக்தி எடுத்துள்ள முக்கிய தீர்மானம்!

பிரதி சபாநாயகர் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்னவை பரிந்துரைக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

பெண்கள் மற்றும் சிறுவர் உரிமைகள் தொடர்பான பிரபல செயற்பாட்டாளரான ரோஹினி கவிரத்னவை பிரதி சபாநாயகர் பதவிக்கு பரிந்துரைக்க கட்சி தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இம்தியாஸ் பாக்கீர் மார்க்கரை முன்னிறுத்துவதற்கு கட்சி முன்னதாகவே தீர்மானித்திருந்தது.

எவ்வாறாயினும், நேற்று (14) இரவு வரை ரோஹினி கவிரத்னவின் வேட்புமனுவை கட்சியின் சிரேஷ்டர்கள் அறிந்திருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பிரதி சபாநாயகர் பதவிக்கு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் அஜித் ராஜபக்சவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4