பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக மேலதிக பொலிஸாரை நியமிக்க பணிப்புரை!

Mayoorikka
4 years ago
பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக மேலதிக பொலிஸாரை நியமிக்க பணிப்புரை!

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக மேலதிக பொலிஸாரை நியமிக்குமாறு அமைச்சர் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளரிடம் பொலிஸ் தலைமையகம் பணிப்புரை விடுத்துள்ளது.

அதன்படி, ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மேலதிகமாக 04 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் அதிகபட்சமாக 6 பொலிஸ் அதிகாரிகள் இணைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக தலா இரண்டு T-56 ரக துப்பாக்கிகளை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு வழங்குமாறும் பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது.
 
கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மையின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4