தனியார் பஸ் உரிமையாளர்கள் பொலிஸாரிடம் விடுத்துள்ள கோரிக்கை

Prathees
4 years ago
தனியார் பஸ் உரிமையாளர்கள் பொலிஸாரிடம் விடுத்துள்ள கோரிக்கை

காலிமுகத்திடலில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து பேருந்துகளை தாக்கி தீ வைத்தவர்களை உடனடியாக கைது செய்யுமாறு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சேதமடைந்த பேருந்துகளுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அண்மையில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தால் போராட்டத்திற்கு தாம் ஆதரவு வழங்கியிருந்த நிலையில், இந்த நேரத்தில் எந்தவொரு தொழிற்சங்கமும் தமக்கு ஆதரவாக நிற்காது எனவும் கெமுனு விஜேரத்ன குற்றம் சுமத்தியுள்ளார்.

தீவைப்பு மற்றும் தாக்குதல்களால் அழிக்கப்பட்ட பஸ்களின் எண்ணிக்கை 45ஐ நெருங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4