நாட்டின் பல பாகங்களிலும் பலத்த மழை மழை பெய்யக் கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம்

Reha
4 years ago
நாட்டின் பல பாகங்களிலும் பலத்த மழை மழை பெய்யக் கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டின் தென்மேல், மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும், மேல் மாகாணத்தின் பல இடங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதுடன், 100 மில்லிமீற்றருக்கு மேல் மழை வீழ்ச்சி பதிவாகுமென தெரிவிக்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4