புதிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

Mayoorikka
4 years ago
புதிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

புதிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

எனினும். எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு புதிய அரசாங்கத்தின் சிறந்த செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் அவர் குறிபிட்டுள்ளார்.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ஸ, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில ஆகியோர் பிரதிநிதித்துவம் செய்யும் 10 கட்சிகளின் கூட்டணி, புதிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்ளாதிருக்க தீர்மானித்துள்ளாக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதித் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4