ரணிலுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா காத்திருக்கிறது - அமெரிக்க தூதுவர்

Prathees
4 years ago
ரணிலுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா காத்திருக்கிறது - அமெரிக்க தூதுவர்

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி  டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

புதிய பிரதமரின் முதல் பணி அனைத்துக் கட்சி ஆட்சியை அமைத்து நெருக்கடியைத் தீர்த்து நாட்டை ஸ்திரப்படுத்துவதாக இருக்கும் என்று அவர் நம்புகிறார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான பரிவர்த்தனைகள் யதார்த்தமான முறையில் முன்னெடுக்கப்பட்டு இலங்கை மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என நம்புவதாக அமெரிக்க தூதுவர் தனது டுவிட்டர் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4