தாக்குதல்களுக்குள்ளான ஹோட்டல் நிர்வாகம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை!

Mayoorikka
4 years ago
தாக்குதல்களுக்குள்ளான  ஹோட்டல்  நிர்வாகம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை!

நீர்கொழும்பு, குரண பகுதியிலுள்ள கிராண்டீசா ஹோட்டல் தாக்கப்பட்டமை தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இந்த தாக்குதலில் ஹோட்டல் ஊழியர் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், ஹோட்டல் காலவரையின்றி மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஹோட்டல் முன்பதிவு செய்த அனைவருக்கும் பணத்தை திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே அவென்ரா ஹோட்டல் குழுமமும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அவென்ரா கார்டன் வளாகத்தில் திருமணம் மற்றும் இதர விசேஷ நிகழ்வுகளுக்கு முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்கள் மேலதிக தகவலுக்கு சந்தைப்படுத்தல் மேலாளர்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ளுமாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4