இன்று மாலை 6 மணிக்கு புதிய பிரதமர் ஜனாதிபதி மாளிகையில் சத்தியப்பிரமாணம்!

Mayoorikka
4 years ago
இன்று மாலை  6 மணிக்கு புதிய பிரதமர் ஜனாதிபதி மாளிகையில் சத்தியப்பிரமாணம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க, புதிய பிரதமராக இன்று (12) மாலை 6 மணிக்கு சத்தியப்பிரமாணம் செய்துக்​கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் வைத்தே அவருக்கான நியமனக் கடிதம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வழங்கப்படவுள்ளது. அதன்பின்னர், கொழும்பு-02 கங்காராமவில் மத வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் முக்கியஸ்தர்கள் பலரும் தங்களுடைய ஆதரவை வழங்கத் தீர்மானித்துள்ளனர் என்றும் அறியமுடிகின்றது.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4