நாளை 7 மணிநேரம் தளர்த்தப்படவுள்ள ஊடரங்கு

Prathees
4 years ago
நாளை 7 மணிநேரம் தளர்த்தப்படவுள்ள ஊடரங்கு

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை (12) காலை 7 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும், நாளை (12) பிற்பகல் 2 மணி முதல் வெள்ளிக்கிழமை (13) காலை 6 மணி வரை மீண்டும் அமுல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16 வது பிரிவின் விதிமுறைகளுக்கு இணங்க நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை காலை 7 மணிக்கு தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியினால் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ அனுமதியின் கீழ் அன்றி பொது வீதி, புகையிரத பாதை, பொது பூங்கா, பொது விளையாட்டு மைதானம் அல்லது கடற்கரையில் எவரும் தங்குவதற்கு அனுமதி இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4