எரிபொருள் விநியோகம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் : பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர்...

#SriLanka #Fuel #Time
எரிபொருள் விநியோகம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் : பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர்...

பாதுகாப்பு அதிகாரிகளிடம் இருந்து உறுதிப்படுத்தல் கிடைத்தவுடன் இன்று (11) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்படும் என இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்தின்  (CPSTL) அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள வன்முறை சூழ்நிலை காரணமாக எரிபொருள் விநியோகம் திங்கட்கிழமை (மே 9) முதல் முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளது .

நாட்டில் அமைதியின்மை ஆரம்பமானதுடன், எரிபொருள் பவுசர்களுக்கு பாதுகாப்பு இல்லாததால் விநியோகத்தை உடனடியாக நிறுத்தினோம்.

எந்தவொரு எரிபொருள் பவுசரையும் மக்கள் தாக்கி தீ மூட்டினால் குறிப்பிட்ட பகுதியில் பாரிய சேதத்தை ஏற்படுத்தக்கூடும், என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் பவுசர்களை விடுவிப்பதற்கான பாதுகாப்பு அங்கீகாரம் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் கிடைக்கப்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கை போக்குவரத்து சபை (SLTB), புகையிரத திணைக்களம், இலங்கை துறைமுக அதிகார சபைக்கு இராணுவ பாதுகாப்பு படையினரால் பாதுகாக்கப்பட்ட எரிபொருள் விநியோகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4