பொலிஸ்மா அதிபர் - இராணுவத் தளபதிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று அழைப்பு

Nila
4 years ago
பொலிஸ்மா அதிபர் - இராணுவத் தளபதிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று அழைப்பு

பொலிஸ் மா அதிபர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு இன்று புதன்கிழமை (11) அழைக்கப்பட்டுள்ளனர்.

காலை 10 மணிக்கு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அவர்களுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ரோஹினி மாரசிங்க அறிவித்துள்ளார்.

மக்களுக்கும் அவர்களது வீடுகளுக்கும் போதிய பாதுகாப்பை வழங்காமை மற்றும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தத் தவறியமை தொடர்பில் இவர்களிடம் விசாரணை நடத்தப்படடவுள்ளது.

உரிய நடைமுறை எப்போதும் பின்பற்றப்பட வேண்டும் என்றும் வன்முறைக்கு காரணமானவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்ட வேண்டும் என்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4