அலையில் சிக்கிய மூன்று ரஸ்யப் பிரஜைகளைக் காப்பாற்றிய பொலிஸார்

Prathees
4 years ago
அலையில் சிக்கிய மூன்று ரஸ்யப் பிரஜைகளைக் காப்பாற்றிய பொலிஸார்

வெலிகம, மிரிஸ்ஸ கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மூவர் நீரோடையில் அடித்துச் செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டதாக  மிரிஸ்ஸ சுற்றுலாப் பொலிஸார் தெரிவித்தனர்.

வெலிகம மிரிஸ்ஸ பிரதேசத்திற்கு வருகை தந்த மூன்று ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் கடந்த 7ஆம் திகதி மதியம், மிரிஸ்ஸ சுற்றுலாப் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த போது, ​​கடல் அலையில் சிக்கி தவிப்பதை  கடற்கரையில் பணியில் இருந்த கடலோர காவல்படை அதிகாரிகள் மற்றும் சுற்றுலா பொலிஸார்  சம்பவத்தை நேரில் பார்த்தனர்.

இதையடுத்து அதிகாரிகள் 3 சுற்றுலா பயணிகளை மீட்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

30 வயதுடைய ரஷ்ய பெண் மற்றும் 29, 30 வயதுடைய  இரண்டு ஆண்களை அதிகாரிகள் மீட்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4